சனி, 9 ஜனவரி, 2010

மரண அறிவித்தல்!! திருவேங்கடம் வேலுப்பிள்ளை (வல்வெட்டித்துறை)

velupillai2001504வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இளைப்பாறிய காணி உத்தியோகத்தரான திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் 06.01.2010 (புதன்கிழமை) இரவு 8 மணிக்கு பனாகொட இராணுவத் தடுப்பு முகாமில் காலமானார். அன்னார் காலஞ்சென்ற வேங்கடம் பருவதவர்தனி தம்பதியரின் மகனும் திருமதி. பார்வதிப்பிள்ளையின் அன்புக் கணவரும், திரு. மனோகரன் (டென்மார்க்), திருமதி. ஜெகதீஸ்வரி மதியாபரணம் (தமிழ்நாடு), திருமதி. வினோதினி இராஜேந்திரன் (கனடா), காலஞ்சென்ற திரு.பிரபாகரன் (தலைவர், தமிழீழ விடுதலைப் புலிகள்) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார். அன்னாரின் பூதவுடல் இன்று (09.01.2010)சனிக்கிழமை நண்பகல் 12 மணி தொடக்கம் வல்வெட்டித்துறை தீருவில் சதுக்கத்தில் மக்கள் அஞ்ஷலிக்காக வைக்கப்பட்டு, நாளை (10.01.2010) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இறுதிக் கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11 மணியளவில் வல்வெட்டித்துறை ஊறணி பொது மயானத்தில் தகனக் கிரியைகள் நடைபெறும். இவ்வறிவித்தலை அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம். தகவல்: வல்வை மக்கள் ஒன்றியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக